ஒத்தையாக நின்று டாடாவை பின்னுக்குத் தள்ளிய எர்டிகா

Maruti Ertiga
யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் மூன்றாம் இடத்தில் இருந்த டாடா மோட்டார்சை ஒத்தையாக நின்று பின்னுக்குத் தள்ளியுள்ளது மாருதி எர்டிகா. இதன்மூலம், யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் மாருதி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் வந்த மாருதி எர்டிகா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 40,000 கார்களுக்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், எஸ்யூவி, எம்பிவி அடங்கிய யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் டாடாவை பின்னுக்குத் தள்ளி எர்டிகா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த கார் மார்க்கெட்டில் 16.7 சதவீத பங்களிப்பை எர்டிகா பெற்றுள்ளது. மஹிந்திரா, டொயோட்டோவுக்கு அடுத்து இதுவரை டாடா மோட்டார்ஸ் மூன்றாம் இடத்தில் இருந்தது.

ஆனால், தற்போது எர்டிகா மூலம் மூன்றாம் இடத்தை மாருதி பிடித்துள்ளது. சுமோ, சஃபாரி, ஆரியா என பல மாடல்களை இந்த செக்மென்ட்டில் வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸை ஒத்தையாக நின்று பின்னுக்குத் தள்ளியுள்ளது எர்டிகா.

இதனிடையே, புக்கிங் செய்யப்படும் 90 சதவீத எர்டிகா கார்கள் டீசல் மாடல் என்பதால் மாருதிக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும், எர்டிகாவின் டீசல் மாடலுக்கும் காத்திருப்பு காலம் கணக்கு வழக்கு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இதனால், ஸ்விப்ட் காருக்கு ஏற்பட்ட நிலை போன்று எர்டிகாவின் காத்திருப்பு காலமும் வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எர்டிகா டீசல் மாடலை கூடிய மட்டும் விரைவாக டெலிவிரி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

Article Published On: Friday, June 15, 2012, 9:54 [IST]
English summary
India's leading carmaker, Maruti Suzuki has achieved another milestone by becoming the third largest utility vehicle (UV) maker. This has happened due to the overwhelming response the recently launched Ertiga MPV has receieved.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+