இந்த ஆண்டின் பெண்களுக்கான காராக இவோக் தேர்வு
இந்த ஆண்டின் பெண்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட காராக ரேஞ்ச் ரோவர் இவோக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ரேஞ்ச்ரோவர் இவோக் பிரிமியம் எஸ்யூவி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு டெலிவிரி செய்யப்பட வேண்டிய கார்கள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டுவிட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
வடிவமைப்பு, தரம் என எல்லாவிதத்திலும் இவோக் தனி மரியாதையை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டின் பெண்களுக்கான சிறந்த காராகவும் இவோக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பெண்களுக்கான சிறந்த காரை தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து வந்த 17 பெண் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகளாக பங்கேற்றனர்.
பெண்கள் டிரைவிங் செய்வதற்கு ஏற்ற கையாளுமை, பாதுகாப்பு வசதிகள், குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கான வசதிகள், தரம், வடிவமைப்பு என பல்வேறு பிரிவுகளின் கீழ் மதிப்பெண்கள் வழங்கும் வகையில் இந்த தேர்வு நடந்தது.
பல்வேறு நிறுவனங்களும் தங்களது கார் மாடல்களை பார்வைக்கு வைத்திருந்தன. இதில், ரேஞ்ச் ரோவர் இவோக்தான் பெண்களுக்கான இந்த ஆண்டின் சிறந்த கார் என்று நீதிபதிகள் தேர்வு செய்தனர். இதற்கடுத்து, பிஎம்டபிள்யூ 3 காருக்கு இரண்டாமிடமும், ஆடி க்யூ 3 காருக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது.


Click it and Unblock the Notifications








