பட்ஜெட் பயம்: பிப்ரவரியில் கார் விற்பனை 13% சதவீதம் அதிகரிப்பு

Car Sales
நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக பிப்ரவரியில் கார் விற்பனை 13 சதவீதம் அதிகரித்தது. பட்ஜெட்டிற்கு பிறகு கார் விலை உயரும் என்ற அச்சத்தால் பிப்ரவரியில் கார் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கார் விற்பனை கடும் வீழ்ச்சி்க் கண்டது. பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம், கார் கடன் வட்டி வீதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்கள் கார் விற்பனை வீழ்ச்சி்க்கு வித்திட்ட முக்கிய காரணங்கள். தொடர்ந்து 4 மாதங்கள் கார் விற்பனையில் சுணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் (2011-2012) முதன் முறையாக கார் விற்பனை அதிபட்ச விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் கார் விற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தமாக 2,11,402 கார்களை விற்பனையாகியுள்ளன. மேலும், நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 18 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் தெரிவித்துள்ளது.

கார் விற்பனை ஏற்றம் கண்டுள்ளதால், சுணங்கிப் போயிருந்த கார் நிறுவனங்கள் தற்போது சற்று நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளன. மேலும், நடப்பு நிதி ஆண்டில் கார் விற்பனையில் சிறிது முன்னேற்றத்துடன் முடிவடையும் என்றும் கார் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, March 12, 2012, 15:25 [IST]
English summary
Car sales in February 2011 have hit the maximum with car buyers deciding to buy cars a month before the union budget for 2012 is announced. This urgency has resulted due to reports of the government planning to increase taxes particularly on diesel vehicles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+