ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்ற அழகிகளுக்கு ஃபேபியா கார் பரிசு

மும்பை, அந்தேரியிலுள்ள பவன்ஸ் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 2012 ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியின் இறுதி சுற்று நடந்தது. கோலாகலமாக நடந்த இந்த விழாவில் திரை நட்சத்திரங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பல கட்டங்களாக நடந்து முடிந்த இந்த போட்டியில் மிஸ் இந்தியா பட்டத்தை வன்ய மிஸ்ராவும், மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டத்தை பிராச்சி மிஸ்ராவும், மிஸ் இந்தியா எர்த் பட்டத்தை சென்னையை சேர்ந்த ரோசெல்லி மரியா ராவும் வென்றனர்.
வண்ணமயமாக நடந்த இந்த விழாவில் வெற்றி பெற்ற மூன்று அழகிகளுக்கும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஃபேபியா காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்தது. கடந்த ஆண்டும் இதேபோன்று ஃபெமினா மி்ஸ இந்தியா அழகிகளுக்கு ஃபேபியா கார்களை ஸ்கோடா ஆட்டோ பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








