நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக ஃபெராரி நடத்திய ஏலம்
இத்தாலியில் நிலநடுக்கத்திற்காக ஃபெராரி நடத்திய ஏலத்தில் 599எக்ஸ்எக்ஸ் இவோ கார் மட்டும் 12 கோடிக்கு ஏலம் போனது. இந்த தொகை விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் இந்த காரை 12.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். மான்ஸாவில் நடைபெற உள்ள இத்தாலி கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியின்போது, ஃபெராரி அணி வீரர்கள் பெர்னான்டோ அலான்சோ மற்றும் பிலிப் மாஸா ஆகியோர் ஏலம் எடுத்தவரிடம் இந்த காரை நேரில் வழங்குகின்றனர்.

இந்த காரில் ஃபெராரி தலைவர் மற்றும் வீரர்களின் கையெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அலான்சோ மற்றும் பிலிப் மாஸாவின் ஹெல்மெட்டுகள், வீரர்கள் பயன்படுத்தும் பிரத்யேக உடைகளும் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் கிடைத்த தொகை அனைத்தும் இத்தாலியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஃபெராரி தலைவர் லூகா டி மான்டிஸிமோலோ கூறுகையில்," பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த ஏலத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபெராரி வீரர்கள், ஏலத்தில் பங்குகொண்டவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications








