பிரிட்டனில் உலக சாதனைக்காக ஒன்றுகூடும் 1000 ஃபெராரி கார்கள்!

{image-07-ferrari300-12 tamil.drivespark.com}பிரிட்டனில் உள்ள பிரபல சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் அடுத்த மாதம் 15ந் தேதி ஒரே நேரத்தில் 1000 ஃபெராரி கார்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஃபெராரி நிறுவனத்தின் வட ஐரோப்பிய பிரிவு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு 385 ஃபெராரி கார்கள் சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் ஒரே நேரத்தில் அணிவகுத்து கின்னஸ் சாதனை படைத்தது.

இதற்கு அடுத்து 2008ம் ஆண்டு ஜப்பானிலுள்ள பியூஜி அதிவிரைவு சாலையில் 490 சூப்பர் கார்கள் அணிவகுத்தது சாதனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் சரித்திர புகழ் வாய்ந்த சில்வர் ஸ்டோன் கார் பந்தய களத்தில் மீண்டும் 1000 ஃபெராரி சூப்பர் கார்கள் ஒரே நேரத்தில் அணிவகுக்க உள்ளன.

கின்னஸ் சாதனைக்காக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஃபெராரி கார் உரிமையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவு இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் அணிவகுத்து நிற்கும் ஃபெராரி கார்களை பார்வையிடுவதற்கு வார நாட்களில் நபர் ஒன்றுக்கு 15 பவுண்ட்டும், வார இறுதிநாட்களில் நபருக்கு 20 பவுண்ட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 15 வயதுகுட்ப்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.

உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் 1000 ஃபெராரி கார்கள் ஒன்றுகூடுவதை காண ஆட்டோமொபைல் துறையினரும், கார் ஆர்வலர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 7, 2012, 10:11 [IST]
English summary
Ferrari North Europe says it now has over 1,000 Ferraris registered for an attempt to break the Guinness World Record for the Largest Parade of Ferrari Cars in next month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+