ரஷ்யாவில் கம்பத்தில் மோதி இரண்டு துண்டான ஃபெராரி கார்

Ferrari Car Accident
ரஷ்யாவில் இரும்பு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான ஃபெராரி சூப்பர் கார் இரண்டு துண்டானது. இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரான்சில் ஃபெராரி கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் காயமடைந்தார்.

இந்தநிலையில், அடுத்து ஒரு ஃபெராரி கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. ரஷ்யாவில் நடந்த இந்த விபத்தில் சாலையோர கம்பத்தில் மோதிய வேகத்தில் அந்த ஃபெராரி 612 ஸ்காக்லிட்டி கார் இரண்டு துண்டுகளானது.

இந்த விபத்தில் ஃபெராரி காரின் முன்பகுதி கம்பத்தில் சிக்கியது. பயணிகள் அமர்ந்திருந்த காரின் பின்பகுதி பல மீட்டர் தூரம் தாண்டி வீசப்பட்டது. காரில் டிரைவர் உள்பட மூன்று பேர் இருந்துள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. டிரைவர் சிறு காயங்களோடு உயிர் தப்பியுள்ளார். மற்ற இருவரும் காயமின்றி தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய ஃபெராரி 612 ஸ்காக்லிட்டி கார் கடந்த ஆண்டுதான் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஃபெராரி எப்எப் கார் அறிமுகமானது. 612 ஸ்காக்லிட்டி சூப்பர் காரில் 5.8 லிட்டர் வி12எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 540பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்டது. மணிக்கு அதிகபட்சம் 315கிமீ வேகத்தில் பறக்கும் சக்தி வாய்ந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, July 16, 2012, 14:19 [IST]
English summary
Ferrari 612 Scaglietti sports car crashed in Russia on last Saturday due to over speed. Driver lost control of the car and slammed into a metal pole on the roadside. Thankfully no major injuries happened to the driver and passengers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+