மார்க்கெட் பங்களிப்பில் 10 மடங்கு வளர்ச்சி பெற ஃபியட் இலக்கு

Fiat Showroom
விற்பனை கடும் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில், மார்க்கெட் பங்களிப்பை 10 மடங்கு வளர்ச்சி பெறுவதற்கு ஃபியட் இலக்கு வைத்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஒத்துழைப்புடன் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்டு வந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால், தற்போது தனியாக ஷோரூம்களை அமைத்து கார் விற்பனையை துவங்கியுள்ளது ஃபியட். தனது பிரத்யேக முதல் கார் ஷோரூமை ஐதராபாத்தில் திறந்தது.

நாட்டின் 67 நகரங்களில் 80 ஷோரூம்களை அடுத்த 12 மாதங்களிலிருந்து 18 மாத கால அவகாசத்துக்குள் திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் வெறும் 437 கார்களை மட்டுமே ஃபியட் விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபியட் துணைத் தலைவர் ரவி பாட்டியா," அடுத்த ஆண்டு மார்ச் முதல் தனியாக கார் விற்பனையை முழு அளவில் மேற்கொள்வோம். இந்தியாவில் எங்களது வர்த்தக கொள்கைகள் அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளோம்.

மேலும், மார்க்கெட் பங்களிப்பை 10 மடங்கு வளர்ச்சி பெற இலக்கு வைத்துள்ளோம். சந்தையில் தனியாக கார் விற்பனையை பிடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு ஓர் நிலையான இடத்தை பிடித்து தற்போதைய மார்க்கெட் பங்களிப்பை கூட்டிவிடுவோம் என்று நம்பிக்கை பொங்க தெரிவித்தார், ரவி பாட்டியா.

More from DriveSpark

Article Published On: Thursday, September 20, 2012, 10:39 [IST]
English summary
Italian automaker Fiat is re-structuring its India operations as part of an exercise to revive its brand, company's senior official said.
மேலும்... #fiat #auto news #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+