இந்திய பிரிவுக்கு புதிய தலைவரை நியமித்த ஃபியட்

Fiat Punto Sport
ஃபியட் கார் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக என்ரிகோ அட்நேஷியோ நியமிக்கப்பட்டுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களில் கார் விற்பனை செய்து வந்த இத்தாலிய நிறுவனமான ஃபியட் விரைவில் தனியாக ஷோரூம்களை திறந்து கார் விற்பனை செய்துள்ளது.

அடுத்த 18 மாதங்களுக்குள் புதிதாக 100 கார் ஷோரூம்களை திறக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான பணிகளை ஃபியட் சுறுசுறுப்பாக துவங்கியுள்ளது.

இந்த பணிகளை கவனிக்கவும், கார் விற்பனையை அதிகரித்து நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில், இந்திய பிரிவுக்கு என்ரிகோ அட்நேஷியோவை தலைவராக நியமித்துள்ளது ஃபியட். பியட் இந்தியா தலைவர் மற்றும் பொதுமேலாளராக அட்டநேஷியோ அடுத்த ஓரிரு வாரங்களில் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் ஃபியட் நிறுவனம் எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சியை எட்டவில்லை. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளோடு இந்திய மார்க்கெட்டில் தனியாக பயணம் மேற்கொள்ளப் போகும் ஃபியட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்புடன் என்ரிகோ பதவியேற்க உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 23, 2012, 16:04 [IST]
English summary
Enrico Atanasio is appointed as the new head – managing director for Fiat India and he will be in charge of the entire Indian subsidiary of Fiat.
மேலும்... #fiat #auto news #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+