காதலர் தின ஸ்பெஷலாக காபி, கார் டெஸ்ட் டிரைவ் ப்ரீ கொடுக்கும் ஃபியட்

வரும் 14ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காதலர் தின கொண்டாட்டங்கள் தற்போதே களை கட்டியுள்ளன.
காதலர் தினத்தையொட்டி பல்வேறு நிறுவனங்களும் காதலர்களை கவர புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில், ஃபியட் கார் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்தற்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது காபி கபேக்கு காதலி அல்லது மனைவியுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காபி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இலவசமாக இத்தாலிய ப்ளேவர் காபியுடன், புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் டெஸ்ட் டிரைவையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. வரும் 18ந் தேதி வரை இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








