ரூ.400 கோடி கலால் வரியை செலுத்த ஃபியட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இத்தாலியை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனம் யுனோ என்ற ஹேட்ச்பேக் காரை கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை விற்பனை செய்து வந்தது. இத்தாலியிலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்து அந்த காரை பிரிமியர் ஆலையில் அசெம்பிளிங் செய்தது ஃபியட்.
மேலும், போட்டியை சமாளிப்பதற்காக மார்க்கெட் விலையை விட யுனோ காரை குறைந்த விலையில் ஃபியட் விற்பனை செய்துள்ளது. இதனால், ஒவ்வொரு யுனோ காருக்கும் செலுத்த வேண்டிய கலால் வரியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கலால் வரித்துறை ஃபியட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அரசுக்கு இழப்பு ஏற்பட்ட ரூ.400 கோடியை ஃபியட் நிறுவனம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, கார் விற்பனையில் தடுமாறி வரும் ஃபியட் நிறுவனத்துக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யுனோ காரை நஷ்டத்தில் விற்பனை செய்த அந்த நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னொரு இடியாக இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








