ஸ்பெஷல் எடிசன் புன்ட்டோ, லீனியாவை களமிறக்கும் ஃபியட்!
கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் புன்ட்டோ மற்றும் லீனியா கார்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஃபியட்.
பண்டிகை காலம் துவங்கியுள்ளதையடுத்து, வாடிக்கையாளர்கள கவரும் விதமாக பல கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஃபியட் நிறுவனம் சலுகைகள் மட்டுமின்றி கூடுதல் அம்சங்களுடன் கூடிய புன்ட்டோ, லீனியா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

தவிர, இன்ஸ்யூரன்ஸ் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடியும், இலவச சாலை அவசர உதவி திட்ட சலுகைகளையும் ஃபியட் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள் விரைவில் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








