இந்தியாவில் முதல் கார் ஒர்க்ஷாப் திறந்த ஃபியட்

இத்தாலிய நிறுவனமான ஃபியட் இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தி மற்றும் விற்பனையை செய்து வந்தது.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் உறவை துண்டித்துக் கொண்டு தற்போது தனியாக களமிறங்கியிருக்கிறது ஃபியட். நாடு முழுவதும் புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.
தவிர, ஃபியட் கஃபே என்ற ரெஸ்ட்டாரண்ட் வகை கார் ஷோரூம்களையும் திறந்து வருகிறது. இந்த நிலையில், தனது முதல் கார் பணிமனையை புனேயில் திறந்திருக்கிறது ஃபியட்.
20,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஒர்க்ஷாப்பில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கார் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கார் சர்வீஸ் மையங்களை திறக்க ஃபியட் முடிவு செய்திருக்கிறது. புதிய ஷோரூம்கள், சர்வீஸ் மையங்கள் உள்ளிட்டவையால் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்று விற்பனையை அதிகரித்துக்கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








