அடுத்த ஆண்டு புதிய கிராஸ்ஓவர் காரை களமிறக்கும் ஃபியட்

அடுத்த ஆண்டு புத்தம் புதிய 500எக்ஸ் கிராஸ்ஓவர் ரக காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது ஃபியட்.

எஸ்யூவி கார்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால், புதிய மாடல்களால் எஸ்யூவி மார்க்கெட் அல்லோகல்லபட்டு வருகிறது.டஸ்ட்டர் எஸ்யூவி களமிறங்கியுள்ள நிலையில், அசத்தலான ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவியை ஃபோர்டு அறிமுகப்படுத்துகிறது.

Fiat 500

இந்த நிலையில், இந்த இரண்டு மாடல்களுக்கும் கடும் போட்டியை கொடுக்கும் வகையில் 500 வரிசையின் சமீபத்திய வரவான 500எக்ஸ் கிராஸ்ஓவர் காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.

அசத்தலான தோற்றம் கொண்டதாக வரும் இந்த காரில் நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் நிரம்பவே இருக்கும். 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இருப்பதால் அதிக இடவசதியையும் வழங்கும்.

1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இந்த புதிய கார் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பல மாடல்களில் பொருத்தப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வாங்க ஏதுவாக இருக்கும்.

மேலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு போட்டியை கொடுக்கும் விலையில் இந்த புதிய காரை ஃபியட் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, July 6, 2012, 10:38 [IST]
English summary
With an array of crossovers and mini SUVs set to debut the Indian market, Italian carmaker Fiat is also planning to have its share in the market. Fiat is reportedly planning to debut the 500 X, a crossover based on the design concept of the iconic 500 small car in 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+