அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 100 கார் ஷோரூம்களை திறக்கும் ஃபியட்

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஒத்துழைப்புடன் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. டாடா ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களும் விற்கப்பட்டு வருகின்றன.
ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால், தற்போது தனியாக ஷோரூம்களை அமைத்து கார் விற்பனையை துவங்கியுள்ளது ஃபியட். தனது பிரத்யேக முதல் கார் ஷோரூமை ஐதராபாத்தில் திறந்துள்ளது ஃபியட்.
இதைத்தொடர்ந்து, நாட்டின் 35 நகரங்களில் 100 ஷோரூம்களை அடுத்த 12 மாதங்களிலிருந்து 18 மாத கால அவகாசத்துக்குள் திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது.
மேலும், சந்தையில் தனியாக கார் விற்பனையை பிடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு ஓர் நிலையான இடத்தை பிடித்து தற்போதைய மார்க்கெட் பங்களிப்பை இரட்டிப்பாக்குவோம் என்று நம்பிக்கை பொங்க தெரிவித்துள்ளது ஃபியட்.


Click it and Unblock the Notifications