அடுத்த 18 மாதங்களில் 2 லட்சம் எஞ்சின்கள் சப்ளை செய்யஃபியட் இலக்கு

ஃபியட் கார்
கார் விற்பனை படு பாதாளத்தில் இருந்தாலும் ஃபியட்டுக்கு கை கொடுத்து வருவது எஞ்சின் விற்பனைதான். மாருதி, டாடா, பிரிமியர் என ஏராளமான நிறுவனங்களுக்கு ஃபியட்தான் டீசல் எஞ்சின்களை சப்ளை செய்து வருகிறது.

கார் விற்பனை மந்தமாக இருந்தாலும் பரவாயில்லை, எஞ்சின் விற்பனையை வைத்து சமாளிக்கும் முடிவுக்கு சற்று திடமாக வந்துவிட்டது அந்த நிறுவனம். எனவே, தற்போது எந்த நிறுவனம் மல்டிஜெட் டீசல் எஞ்சினை கேட்டாலும் தயங்காமல் அக்ரிமென்ட் போட்டுவிடுகிறது.

இதுபோன்று போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் மாருதி நிறுவனத்துக்கு மட்டும் ஆண்டுக்கு 1,00,000 லட்சம் டீசல் எஞ்சின்களை சப்ளை செய்கிறது ஃபியட். ஸ்விப்ட், டிசையர் கார்களில் இந்த எஞ்சின்தான் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், டாடாவிடமிருந்து விலகி தனியாக கார் விற்பனையை செய்யும் முயற்சிகள் ஒருபக்கம் தீவிரமாக நடந்தாலும், அதைவிட டீசல் எஞ்சின் விற்பனைக்கு அந்த நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏனெனில், கார் விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கு பல முயற்சிகள் தேவைப்படுகிறது.

புதிய மாடல்கள், பலமான டீலர் நெட்வோர்க், முதலீடு என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் டீசல் எஞ்சின் உற்பத்தி மூலம் தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஃபியட் முடிவு செய்துள்ளது. எனவே, அடுத்த 18 மாதங்களில் 2,00,000 லட்சம் எஞ்சின்களை விற்பனை செய்ய ஃபியட் இலக்கு வைத்துள்ளது.

இதில், 40 சதவீத எஞ்சின்கள் டாடா மற்றும் ஃபியட் கார்களி்ல் பொருத்தப்படும். மீதமுள்ள எஞ்சின்கள் அனைத்தும் விற்பனைக்குத்தான். மேலும், புதிய கார் நிறுவனங்களுக்கு தேவைப்பட்டால் டீசல் எஞ்சின்களை சப்ளை செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடுத்த 18 மாதங்களில் ஃபியட் விற்பனை செய்யப்போகும் கார்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது எஞ்சின் விற்பனை 5 மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 31, 2012, 15:13 [IST]
English summary
Fiat is set to supply over the next 12-18 months more than 200,000 engines, four to five times the number of cars that it will produce and sell during this period.
மேலும்... #fiat #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+