இந்தியாவில் மீண்டும் டிரக்குகளை களமிறக்க ஃபியட் இவெகோ திட்டம்

இவெகோ நிறுவனத்துக்கு இந்திய மார்க்கெட் புதிதல்ல. கடந்த 2006ம் ஆண்டு வரை அசோக் லேலண்ட் கூட்டணியில் டிரக்குகளை விற்பனை செய்து வந்தது.
எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் கூட்டணியில் தன் வசமிருந்த 15 சதவீத பங்குகளை ரூ.600 கோடிக்கு அசோக் லேலண்டிடமே விற்று விட்டு இடத்தை காலி செய்தது. இந்த நிலையில், இந்திய டிரக் மார்க்கெட் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதையடுத்து, மீண்டும் களமிறங்க இவெகோ முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் தவிர பாரத் பென்ஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய டிரக் மார்க்கெட்டை ஆக்கிரமிக்க துவங்கியிருப்பதால் கடும் சந்தை போட்டி இருக்கும்.
தனியாக இவெகோ களமிறங்கும் பட்சத்தில் இவெகோ கடும் சவால்களை சந்திக்க நேரிடும். எனவே, உள்நாட்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளை அந்த நிறுவனம் துவங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








