இந்தியாவுக்கு ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடல் வராதாம்

Suzuki Swift Sport
சூப்பரப்பு சொல்ல வைக்கும் வடிவமைப்பு, அதிக பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் சுஸுகியிடம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் புதிய ஸ்விப்ட் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஐரோப்பிய சந்தைக்கான புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் கான்செப்ட் மாடலை சுஸுகி பார்வைக்கு அறிமுகம் செய்தது.

1.6 லிட்டர் எஞ்சினுடன் வரும் ஸ்விப்ட் ஸ்போர்ட் 6 ஸ்பீடு மேனுவல் கியர் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும். மேலும், அதிக மைலேஜ் கொடுக்கும் காராகவும் இருக்கும் என்று சுஸுகி கூறுகிறது.

மேலும், ஸ்விப்ட் ஸ்போர்ட் எஞ்சின் 135 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாப் வசதி,புளூடூத், ஆடியோ ஸ்டீரிமிங், 6 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், யுஎஸ்பி இணைப்பு வசதி, கிளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ளிட்ட ஏராளமான வசதிகளுக்கும் பஞ்மிருக்காது.

இதேபோன்று, ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், அசத்தும் வடிவமைப்பு கொண்ட ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை 5 கதவுகள் கொண்ட மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், சுஸுகி இதுகுறித்து இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில், 5 கதவுகள் கொண்ட ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்த சுஸுகி ஆயத்தமாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு 5 கதவுகள் கொண்ட ஸ்விப்ட் ஸ்போர்ட் கார்களின் ஏற்றுமதியையும் ஜப்பானிலிருந்து சுஸுகி துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் 5 கதவுகள் கொண்ட ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை சுஸுகி அறிமுகப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் சுஸுகியிடம் இல்லை என்ற உதட்டை பிதுக்கும் பதில்தான் கிடைத்துள்ளது. ஸ்விப்ட் ஸ்போர்ட் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ரூ.12.6 லட்சம் விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ரூ.13.6 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய மார்க்கெட்டுக்கு இது அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று கருதி ஸ்விப்ட் ஸ்போர்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த சுஸுகி விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கையாளுமை மற்றும் பெர்ஃபார்மென்ஸை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்கள் நிச்சயம் ஸ்விப்ட் ஸ்போர்ட்டை வாங்க தயாரக உள்ளனர் என்பதையும் இங்கே கூறியாக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2012, 17:27 [IST]
English summary
The five door Swift Sport is priced at $23,990 (Rs.12.6 Lakhs) with the manual and $25,990 (Rs.13.6 lakhs) with the CVT. The price might be a disappointment for Indian buyers. And may be this is the reason why Maruti Suzuki has not launched this impressive and powerful hatchback in India. But considering its performance, there will be people among us who are ready to buy the Swift Sport.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+