குர்கா ஜீப்பை மீண்டும் களமிறக்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

குர்கா ஜீப்பை விரைவி்ல் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.

மெர்சிடிஸ் பென்ஸ் கெலாண்டே வேகன் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட குர்கா ஜீப்பை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தயாரித்து வந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் கடந்த ஆண்டு குர்கா உற்பத்தியை நிறுத்தியது.

Force Kurkha

இந்த நிலையில், மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளதையடுத்து, மீண்டும் குர்கா ஜீ்ப்பை களமிறக்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

ஆஃப் ரோடு அம்சங்கள் நிரம்ப பெற்ற இந்த எஸ்யூவியை மேம்படுத்தி கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் சிஆர்டிஐ எஞ்சினை புதிய குர்காவில் பொருத்த ஃபோர்ஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2.2 லிட்டர் எஞ்சினுடன் வரும் குர்கா அதிகபட்சம் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எஸ்யூவியாக வருகிறது. மேலும், லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்றும் மார்க்கெட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

புதிய குர்கா மூலம் எஸ்யூவி மார்க்கெட்டில் நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்று ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 30, 2012, 13:10 [IST]
English summary
Force motors is planning to relaunch the Kurkha suv soon. It will be equipped with 2.2 liter CRDI diesel engine and it churns out 140 bhp power.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+