ஃபோர்டு இந்தியாவின் புதிய தலைவராக ஜோகிந்தர்சிங் நியமனம்

ஃபோர்டு இந்தியா தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் தற்போது மைக்கேல் போனிஹாம் பதவி வகித்து வருகிறார். ஃபோர்டு ஃபிகோ, புதிய ஃபியஸ்ட்டா உள்ளிட்ட கார் மாடல்களை அறிமுகப்படுத்தி இந்திய மார்க்கெட்டில் ஃபோர்டு முக்கியத்துவம் பெறுவதற்கு மைக்கேல் போனிஹாம் முக்கிய பங்கு வகித்தவர்.
மேலும், கடந்த 27 ஆண்டுகளாக ஃபோர்டு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு நாடுகளில் மைக்கேல் போனிஹாம் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், டிசம்பர் மாதத்தோடு மைக்கேல் போனிஹாம் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஜோகிந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஃபோர்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் 1ந் தேதி முதல் இவர் பொறுப்பேற்கிறார். இவர் தற்போது சென்னையிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக சேவை மையத்தின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








