ஃபோர்டு ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டா- சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Ford Fiesta
மேலை நாடுகளில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்டோமேட்டிக் கார்களுக்கு இந்தியாவிலும் வரவேற்பு கூடி வருகிறது. இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கார்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா, மாருதி எஸ்எக்ஸ்-4 ஆகிய மிட் சைஸ் கார்களின் வரிசையில் தற்போது ஃபோர்டு ஃபியஸ்ட்டாவின் ஆட்டோமேட்டிக் வெர்ஷன் வந்துள்ளது.

டியூவல் கிளட்ச் தொழில்நுட்பத்துடன் வந்துள்ள புதிய ஃபியஸ்ட்டா விற்பனையில் நிச்சயம் புதிய இடத்தை தனக்கு பிடித்துக்கொடுக்கும் என்று ஃபோர்டு வெகுவாகவே நம்புகிறது. ஸ்டைல், டைட்டானியம் பிளஸ் என்ற இரண்டு வேரியண்ட்களில் புதிய ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டாவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஃபோர்டு.

இதில், ஸ்டைல் ரூ.8.99 லட்சத்திலும், டைட்டானியம் ப்ளஸ் ரூ.9.73 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. மேனுவல் வேரியண்ட்டை விட ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டா ரூ.75,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

வரிசை கட்டும் மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் வந்துள்ள புதிய ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டாவின் சிறப்பம்சங்களை காணலாம்.

எஞ்சின் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்:

புதிய ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 108 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், டியூவல் கிளட்ச் பவர் ஷிப்ட் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த புதிய பவர் ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை விட ஸ்மூத்தாகவும், பெர்ஃபெக்ட்டாவும் கியர் ஷிப்டிங்கை வழங்கும். மேலும், குறைந்த திறன் விரயம், அதிக எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை இந்த புதிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொடுக்கும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

ஹில் அசிஸ்ட் வசதி:

ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டாவில் ஹில் அசிஸ்ட் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. இதன்மூலம், சரிவான பாதைகளில் காரை நிறுத்தி எடுக்கும்போது சட்டென்று பின்னே செல்லாது. ஏனெனில், ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பம் காரை சரிவான பாதையில் பின்னோக்கி செல்லாதவாறு 2.5 வினாடிகளுக்கு பிரேக்கை பிடித்து வைத்திருக்கும். மேலும், ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட கார்களுக்கு ஹில் அசிஸ்ட் அவசியமானதாக கருதப்படுகிறது.

சொகுசு வசதிகள்:

வாய்ஸ் கன்ட்ரோல் வசதியுடன் ஏசி, சென்ட்ரல் கன்சோல் காயில் ஹோல்டர், ப்ளோர் கன்சோல் கப் ஹோல்டர், முன் பின் இருக்கைகளில் புத்தகங்கள் வைப்பதற்கான இடம், இருக்கையின் அடியில் ஸ்டோரேஜ் வசதி, முன்பக்கம், பின்பக்கம் பவர் விண்டோ, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், கிளவ் பாக்ஸில் லைட் வசதி ஆகியவை இருக்கிறது.

தவிர, அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் பின் இருக்கை ஹெட்ரெஸ்ட்டுகள், பின் இருக்கைகளை படுக்கை போன்று மாற்றிக்கொள்ளும் வசதி, பின் இருக்கையில் கைகளை வைப்பதற்கான ஆர்ம் ரெஸ்ட், எலக்ட்ரிக் பூட் ரிலீஸ், எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் ஆகிய வசதிகள் ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டாவில் இருக்கின்றன.

டிரைவிங் செய்ய உதவிகரமான வசதிகள்:

பனி விளக்குகள், புல் டிரிப்ட் காம்பன்சேஷன் தொழில்நுட்பம் கொண்ட டில்ட் ஸ்டீயரிங், ரியர் டிஃபாகர், டிஜிட்டல் கிளாக், பியூவல் கம்ப்யூட்டர், குரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர், டாக்கோமீட்டர், எரிபொருள் குறைந்தால் எச்சரிக்கும் இண்டிகேட்டர், டிரைவர் சீட் பெல்ட் அணியாததாது குறித்த எச்சரிக்கை, ஹெட்லைட் எரிந்தால் எச்சரிக்கை செய்யும் வசதிகள் ஃபியஸ்ட்டாவை எளிதாக ஓட்டுவதற்கு உதவும்.

பாதுகாப்பு வசதிகள்:

இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவர் சைடு ஏர்பேக், முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக், சைல்டு லாக், ரிமோட் புரோகிராமபிள் கீ என்ட்ரி சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஆட்டோமேட்டிக் ஃபியஸ்ட்டாவில் இருக்கின்றன.

மிட்சைஸ் ரகத்தில் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் கார்களுடன் ஃபியஸ்ட்டாவின் விலை ஒப்பீட்டு விபரம்

ஃபோர்டு ஃபியஸ்ட்டா (ஸ்டைல் வேரியண்ட்) : ரூ.8.99 லட்சம்

ஃபோர்டு ஃபியஸ்ட்டா(டைட்டானியம் ப்ளஸ்) : ரூ.9.73 லட்சம்

ஹோண்டா சிட்டி வி ஆட்டோமேட்டிக் : ரூ.9.42 லட்சம்

ஹோண்டா சிட்டி வி ஆட்டோமேட்டிக் சன்ரூப் : ரூ.10.22 லட்சம்

ஹூண்டாய் வெர்னா ஆட்டோமேட்டிக் : ரூ.9.72 லட்சம்

வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆட்டோமேட்டிக் : ரூ.9.21 லட்சம்

மாருதி எஸ்எக்ஸ்-4 ஆட்டோமேட்டிக் : ரூ.8.50 லட்சம்

மாருதி எஸ்எக்ஸ்-4 லெதர் ட்ரிம் : ரூ.8.84 லட்சம்

More from DriveSpark

Article Published On: Monday, March 5, 2012, 11:23 [IST]
English summary
Ford has launched the automatic version of the Fiesta sedan just dew minutes ago. With a starting price of Rs.8.99 Lakhs (ex-showroom, Delhi), the new Fiesta will be the top end petrol variant of the Ford sedan. The Fiesta automatic variant is less affordable than its rivals. The above compares the prices of the Fiesta automatic with other petrol automatics offered in its segment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+