ஃபிகோவுக்கு பிறந்தநாள்: சிறப்பு சலுகைகளை வழங்கும் ஃபோர்டு

Ford Figo
ஃபிகோ கார் அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை ஃபோர்டு வழங்குகிறது.

கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9ந் தேதி ஃபிகோ ஹேட்ச்பேக் காரை ஃபோர்டு அறிமுகம் செய்தது. சிறந்த வடிவமைப்பு, அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் போன்றவற்றால் வெகு சீக்கிரத்தில் வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பை பெற்றது.

தவிர, நீண்ட காலமாக இந்திய மார்க்கெட்டில் இருந்தும் முக்கிய இடத்தை பிடிக்கமுடியாமல் தவித்த ஃபோர்டு நிறுவனத்துக்கும் தனது விற்பனை மூலம் புதிய முகவரியை ஏற்படுத்திக்கொடுத்தது ஃபிகோ. இந்த நிலையில், ஃபிகோ அறிமுகம் செய்யப்பட்டு நாளையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதை கொண்டாடும் வகையில், ஃபிகோ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஃபோர்டு. ஃபோர்டு ஷோரூம்களில் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் காத்திருப்பதோடு, ஃபிகோ காருக்கு ரூ.16,000க்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் சலுகையையும் ஃபோர்டு வழங்குகிறது.

தவிர, ஆன்லைன் மூலம் ஃபிகோ காருக்கான டைட்டானியம் ப்ளஸ் ஆக்சஸெரீஸ்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடியையும் வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 7, 2012, 17:14 [IST]
English summary
American car maker Ford to celebrate the second birthday of Figo on 9th. The customers, who will visit the Ford dealerships on the occasion will get attractive gifts and will receive Rs. 16000 worth free insurance. The company also will give 15 per cent discount on the online purchase of the Titanium Plus Accessory Pack.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+