கிளாசிக் காருக்கு ஃபோர்டு வழங்கும் ஆக்சஸெரீஸ் லிஸ்ட்
ஃபோர்டு நிறுவனம் கூடுதல் அம்சங்களுடன் கிளாசிக் காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 32.38 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளதால் வாடிக்கையாளர்களின் கவனம் ஃபோர்டு கிளாசிக் காரின் பக்கம் திரும்பியுள்ளது.
வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள புதிய கிளாசிக் காருக்கு ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களை தவிர்த்து சில கூடுதல் ஆக்சஸெரீஸ்களை ஃபோர்டு வழங்குகிறது. இதன்மூலம் கிளாசிக் காரின் அழகு கூடுவதோடு, அதிக சொகுசான பயண அனுபவத்தையும் பெற முடியும். இதில், முக்கியமான சில ஆக்சஸெரீஸ்களை இங்கே காணலாம்.

ரீடிங் லேம்ப்:
காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் புத்தகம் படிக்க ஏதுவாக ரீடிங் லேம்ப்பை வாங்கிக் கொள்ளலாம். இந்த விளக்கின் கம்பம் எப்படி வேண்டுமானாலும் நீட்டி மடக்க முடியும். இது பயணியின் பின்பகுதியிலிருந்து ஒளியை பரவ செய்யும் என்பதால் கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் நீண்ட நேரம் படிக்க முடியும்.
பில்லோ குஷன்ஸ்:
காரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் காரிலேயே தூங்குவதற்கு வசதியாக சிறிய தலையணைகளை கிளாசிக் காருக்கு ஃபோர்டு விற்பனை செய்கிறது. ரெக்ரான் பைஃபைரில் தயாரிக்கப்பட்ட இந்த தலையணைகள் பீயேஜ் வண்ணத்தில் வருவதால் உங்கள் காருக்கு கூடுதல் கவர்ச்சியை வழங்குவதோடு, சுகமான பயணத்தையும் வழங்கும்.
லெதர் வினைல் சீட் கவர்:
கிளாசிக் காரின் உட்புறத்தை வெகுவாக கூட்டும் வகையில் இந்த லெதர் சீட் கவர்களை ஃபோர்டு வழங்குகிறது. அழகுக்கு மட்டுமல்லாது இருக்கையில் கறைகள் படிந்தாலும் எளிதாக நீக்கலாம். அதிகமாக தூசி படியாமலும் இருக்கும்.
லெதர் ஸ்டீயரிங் வீல்:
கார் ஓட்டும்போது கைகளுக்கு மிருதுவாகவும் அதேநேரத்தில் அதிக கிரிப் தரும் வகையில் ஸ்டீயரிங் வீலுக்கு பிரத்யேக லெதர் கவரை ஃபோர்டு விற்பனை செய்கிறது.
ஸ்போர்ட்ஸ் பெடல்:
ஆக்ஸிலேட்டர், பிரேக் மற்றும் கிளட்சுக்கு பிரத்யேக வடிவமைப்பு கொண்ட ஸ்போர்ட்ஸ் பெடல்களை வாங்கி பொருத்திக் கொண்டால் கால்களுக்கு அதிக கிரிப் கிடைப்பதோடு, கவர்ச்சியாகவும் இருக்கும்.
ரியர் விங் ஸ்பாய்லர்:
காரின் டிக்கியின் மேலே பொருத்தும் வகையிலான ரியர் விங் ஸ்பாய்லர் கிளாசிக் காரை ஸ்போர்ட்ஸ் போன்று மாற்றும் ஒரு அசத்தலான ஆக்சஸெரீயாக கூறலாம். மேலும், அதிவேகத்தில் செல்லும்போது காரின் அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கும் இது உதவும்.
இதுதவிர, ஏராளமான ஆக்சஸெரீஸ்களை கிளாசிக் காருக்கு ஃபோர்டு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








