லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தருகிறதாம் ஃபோர்டு கிளாசிக்..!

Ford Classic
புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் ஃபோர்டு கிளாசிக் செடான் காரின்(பழைய ஃபியஸ்ட்டா) டீசல் எஞ்சின் லிட்டருக்கு 32.38 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.

ஃபியஸ்ட்டா என்ற பெயரில் இரு செடான் கார்களை மாடலை ஃபோர்டு விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், பெயர் குழம்பத்தை தவிர்க்க பழைய ஃபியஸ்ட்டா காரின் பெயரை கிளாசிக் என்று மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஃபோர்டு.

புதிய கிளாசிக் காரின் டாப் வேரியண்ட்டான டைட்டானியம் கார் புனேயில் உள்ள தேசிய வாகன ஆராய்ச்சி மையத்தில்(அராய்) சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.

இதில், கிளாசிக் டீசல் மாடலில் பொருத்தப்பட்டிருந்த 1.4 லிட்டர் எஞ்சின் லிட்டருக்கு 32.38 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கொடுத்துள்ளது. கிளாசிக் காரின் பெட்ரோல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் டியூராடெக் எஞ்சின் லிட்டருக்கு 21.27 கிமீ மைலேஜ் தருவதாகவும் சான்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஏராளமான புதிய வசதிகளுடன் வந்துள்ள புதிய கிளாசிக் காரின் டாப் வேரியண்ட்டான டைட்டானியம் பெட்ரோல் மாடல் ரூ.6.8 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.7.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 17, 2012, 10:31 [IST]
English summary
Well, what we are mainly talking is about the Ford Classic Titanium diesel model's record breaking fuel economy. The 1.4 litre diesel engine boasts whopping 32.38 Kmpl on the cheaper fuel. The fuel economy figure has been certified by Automotive Research Association Of India (ARAI).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+