பட்ஜெட்டில் வரி: ஈக்கோஸ்போர்ட் நீளத்தை குறைக்கும் ஃபோர்டு

குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட அசத்தலான காம்பெக்ட் எஸ்யூவியை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஃபோர்டு பார்வைக்கு வைத்திருந்தது. பிரிமியம் எஸ்யூவி கார்களில் இருக்கும் அளவுக்கு ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் இந்த காரை 10 லட்சத்துக்குள் விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்டு முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கார்களுக்கு 24 சதவீத வரி என்று அறிவிக்கப்பட்டது. இதனால், 10 லட்சத்திற்குள் ஈக்கோஸ்போர்ட்டை விற்பனைக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போது அவசரம் அவசரமாக ஈக்கோஸ்போர்ட்டில் பல மாறுதல்களை ஃபோர்டு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீளத்தையும் 4 மீட்டருக்குள் குறைத்து வருவதாகவும், பெரும்பான்மையான உதிரிபாகங்களை இங்கேயே பெறுவதற்கான ஏற்பாடுகளை ஃபோர்டு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 மீட்டருக்கும் கீழ் ஈக்கோஸ்போர்ட் நீளம் குறைந்தால் 12 சதவீதம் மட்டுமே கலால் வரி விதிக்கப்படும். எனவே, 10 லட்சத்தில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு விடலாம். இந்த காரணங்களால் ஈக்கோஸ்போர்ட் அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








