ரூ.14 லட்சத்தில் பிரேசிலில் களமிறங்கும் போர்டு ஈக்கோஸ்போர்ட்

அடுத்த மாதம் பிரேசிலில் அறிமுகமாகும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ஃபோர்டு முன்பதிவு துவங்கியுள்ளது. அங்கு ரூ.14 லட்சத்தில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்தியாவில் ரூ.9 லட்சம் விலையில் களமிறக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு நிறுவனத்தின் பிரேசில் நாட்டுக்கான இணையதளத்தில் ஈக்கோஸ்போர்ட் விலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3 வேரியண்ட்களில் அங்கு விற்பனைக்கு வர இருக்கும் ஈக்கோஸ்போர்ட்டின் பேஸ் வேரியண்ட் ரூ.14.5 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிட் வேரியண்ட் ரூ.16.22 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.17.22 லட்சத்திலும் அங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் நீளத்தை 4 மீட்டருக்கும் குறைவாக ஃபோர்டு சுருக்கியுள்ளது. எனவே, வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் ரூ.9 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக வரும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை ஆல் நியூ ஃபிய்ஸ்ட்டா காரை விட விலை அதிகம் கொண்டதாக நிலை நிறுத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் நம் நாட்டு மார்க்கெட்டில் ஈக்கோஸ்போர்ட் தடம் பதித்து விடும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 16, 2012, 12:27 [IST]
English summary
Ford has promised to roll out the EcoSport compact SUV in 100 markets across the world including India. And as part of the American car maker's schedule, the EcoSport will be first launched in the Latin American country of Brazil next month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+