சென்னையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சோதனை: மார்க்கெட்டை நெருங்குகிறது?

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைத்துள்ள புதிய மினி எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த மினி எஸ்யூவியை ஃபோர்டு பார்வைக்கு வைத்திருந்தது.
அப்போதே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியது. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் இறுதிகட்ட சோதனை ஓட்டங்கள் சென்னையில் நடத்தப்பட்டுள்ளன. எனவே, விரைவில் ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மினி எஸ்யூவியில் 1.0 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. 1.6 லிட்டர் எஞ்சின்களுக்கு இணையான பவரை வெளிப்படுத்தும் ஆற்றலை இந்த எஞ்சின் கொண்டிருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
அதிக எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத அம்சங்களுடன் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அசத்த வருகிறது.


Click it and Unblock the Notifications








