டஸ்ட்டரை விட குறைந்த விலையில் ஈக்கோஸ்போர்ட்: ஃபோர்டு திட்டம்

By Saravana
Ford Ecosport
டஸ்ட்டரை விட குறைந்த விலையில் ஈக்கோஸ்போர்ட்டை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மினி எஸ்யூவி மார்க்கெட்டில் முதலாவதாக களமிறங்கிய ரெனோ டஸ்ட்டருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச மாடலாக களமிறங்கும் புத்தம் புதிய ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவி.

இந்தியாவில் வரிச்சலுகை பெறும் விதத்தில் ஈக்கோஸ்போர்ட்டை சுருக்கிவிட்டது ஃபோர்டு. ஆம், 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் புதிய ஈக்கோஸ்போர்ட் வருகிறது. ஏராளமான பிரிமியம் அம்சங்களுடன் வருவதால் ஈக்கோஸ்போர்ட்டை எதிர்பார்த்து ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

பிரிமியம் அம்சங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வருவதால் ரெனோ டஸ்ட்டரைவிட ஈக்கோஸ்போர்ட் விலை அதிகமிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் ஆரம்ப விலையில் ஈக்கோஸ்போர்ட் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், மார்க்கெட்டை எளிதாக பிடிக்கும் வகையில் டஸ்ட்டரை விட குறைந்த விலையில் ஈக்கோஸ்போர்ட்டை களமிறக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி ரூ.7.19 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில், ஈக்கோஸ்போர்ட் ரூ.7 லட்சத்திற்குள் ஆரம்ப விலையுடன் வரலாம் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.

இதனால், ஈக்கோஸ்போர்ட் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 13, 2012, 10:44 [IST]
English summary
American car maker Ford is planning to launch the EcoSport at a price less than Renault Duster's price level in Indian Market. Ford India will achive this due to smaller length, less than 4 meter and sub 1.5L engine which will help then in keeping the price levels lower.
மேலும்... #ford #ecosport #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+