இந்தியாவில் புதிய ஹேட்ச்பேக் கார்களை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு

Fiesta Hatch
இந்தியாவில் மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக் கொள்ளும் வகையில், புதிய ஹேட்ச்பேக் கார்களை களமிறக்க இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

ஹூண்டாய், டொயோட்டா, போக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களால் -ஃபோர்டு நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க புதிய கார்களை களமிறக்குவதை தவிர வேறுவழியில்லை என்பதை ஃபோர்டு உணர்ந்துவிட்டது.

ஹேட்ச்பேக் கார்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய மார்க்கெட்டில் ஃபிகோவை மட்டும் காலத்தை ஓட்டுவது கடினம் என்ற நிலையில் இருக்கும் ஃபோர்டு, எதிர்காலத்தில் நிச்சயம் பின்தங்குவது உறுதியாகியுள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில் ஃபிகோ காருக்கு துணையாக பல புதிய ஹேட்ச்பேக் கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது .இதுதவிர, ஃபிகோவை விட அதிக விலை மற்றும் குறைந்த விலையில் இரண்டு ஹேட்ச்பேக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஃபோர்டு.

இதனை ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஆப்ரிக்க பிராந்தியத்துக்கான தலைவர் ஜோ ஹின்ரிக்கஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படும் ஃபோர்டின் சிறிய காரான கா என்ற மாடலும், ஃபியஸ்ட்டாவின் ஹேட்ச்பேக் ரக காரும் இந்தியாவில் அறிமுகமாகும் பட்டியலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் அமைக்கப்பட இருக்கும் புதிய தொழிற்சாலையில் புதிய கார் மாடல்களை உற்பத்தி செய்யவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 3, 2012, 17:06 [IST]
English summary
Ford is planning to launch new entry level cars in India in a bid to capture more market share and boost its sales. According to reports, the American carmaker is also keen to launch a premium car above the its best selling hatchback, the Figo.
மேலும்... #ford #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+