மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய ஃபோர்டு ஃபிகோ!

முன்பக்க கிரில், பனி விளக்குகள், டேஞ்சர் விளக்குகள், பிரேக் லைட், ரிவர்ஸ் லைட் என அனைத்தும் வடிவமைப்பில் மாற்றம் கண்டிருக்கிறது. வெளிப்புற வடிவமைப்பு மட்டுமின்றி உள் அலங்காரங்களிலும் பலவிதமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய ஃபிகோ.
மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதத்தில் வர இருக்கும் புதிய ஃபிகோ மஞ்சள் உள்ளிட்ட புதிய வண்ணங்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கீ லெஸ் என்ட்ரி, புதிய ஆடியோ சிஸ்டம் மற்றும் கூடுதல் சொகுசு வசதிகளையும் புதிய ஃபிகோ கொண்டிருக்கும்.
விலையிலும் புதிய ஃபிகோ போட்டியாளர்களுக்கு சவாலை கொடுக்கும் என்று தெரிகிறது. தீபாவளிக்கு முன்னதாக புதிய ஃபிகோ வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








