இந்தியாவுக்காக குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு

ஃபிகோ மூலம் தனி இடத்தை பிடித்தாலும், கார்களின் விலை நிர்ணய விஷயத்தில் ஃபோர்டு கோட்டை விட்டு விடுகிறது. மார்க்கெட்டுக்கு தக்கவாறும், பிற கார் மாடல்களின் விலையையும் மனதில் கொள்ளாமல் விலை நிர்ணயம் செய்வதால் இன்னமும் சரியான இடத்தை பிடிக்க முடியாமல் ஃபோர்டு தடுமாறி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவை மிக முக்கிய மார்க்கெட்டாக மாற்றிக்கொள்ளும் முயற்சிகளை அந்த நிறுவனம் துவங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக குறைக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புதிய கார் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளது. குறைந்த விலையில் புதிய கார் மாடல்கள் வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 70 சதவீதம் கார்கள் சிறிய கார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஃபிகோவைவிட குறைந்த விலை களமிறக்கவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு இந்தியாலிருந்து கார்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளதாக ஃபோர்டு இந்தியா தலைவர் மைக்கேல் போனிஹாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








