மேம்படுத்தப்பட்ட புதிய ஃபிகோவை அறிமுகப்படுத்திய ஃபோர்டு
வடிவமைப்பில் புதுப்பொலிவு மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய ஃபிகோ காரை ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
2010ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபிகோ முதன்முறையாக மாற்றங்களை கண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் தலா 4 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2012 ஃபோர்டு ஃபிகோ
விலை விபரம்
பெட்ரோல்
எல்எக்ஸ்ஐ ரூ.3,84,999
இஎக்ஸ்ஐ ரூ.4,22,999
இசட்எக்ஸ்ஐ 4,52,999
டீசல்
டியூராடார்க் எல்எக்ஸ்ஐ ரூ.4,81,999
டியூராடார்க் இஎக்ஸ்ஐ ரூ5,20,999
டியூராடார்க் இசட்எக்ஸ்ஐ ரூ.5,50,999
டியூராடார்க் டைட்டானியம் ரூ.5,99,999

பூட் ரூம்
புதிய ஃபிகோவின் பூட் ரூம் இடவசதியும் மேம்பட்டிருக்கிறது.

வசீகரமான முகப்பு
முகப்பு முழுவதும் பல மாற்றங்களை செய்து புதிய ஃபிகோவுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது ஃபோர்டு.

புளூடூத் வசதி
புளூடூத் வசதியுடன் கூடிய மியூசிக் பிளேயர்.

பின்புற மாற்றம்
ஃபிகோவின் டேஞ்சர் லைட்டுகளில் மாற்றங்களை செய்துள்ளது ஃபோர்டு

ஏர்பேக்ஸ்
டிரைவர் மற்றும் முன்புற பயணிகளுக்கு காற்றுப்பைகளுடன் வந்திருப்பது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக கூறலாம். ஃபேப்ரிக் இருக்கைகளும் கூடுதல் சொகுசை தரும்.

புதிய வண்ணங்களில்...!!
புதிய மஞ்சள் மற்றும் நீல வண்ணங்களில் வந்திருக்கிறது புதிய ஃபிகோ.
புதிய ஹெட்லைட், ஹெட்லைட்டுக்குள் வந்த இன்டிகேட்டர் விளக்குகள், எண்கோண வடிவ ஏர்டேம், மைல்டு கிரில் என முகப்பு மிக வசீகரமாக மாறியிருக்கிறது.
இதேபோன்று, டேஞ்சர் விளக்குகளும் மாற்றம் கண்டிருக்கிறது. உடனடி பிக்கப் கிடைக்கும் வகையில் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது. டபுள் பல்ப் வெதர் ஸ்ட்ரிப்ஸ் கொண்ட கதவுகளால் கேபினுக்குள் சப்தம் மிக குறைவாக இருக்கும்.
இருக்கைகளில் அமரும் போது தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஹெட்ரெஸ்ட் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
டைட்டானியம் வேரியண்ட்டில் புதிய 14 இஞ்ச் அலாய் வீல் புதிய ஃபிகோவுக்கு கவர்ச்சியை மேலும் கூட்டுகிறது. மொத்தத்தில் பண்டிகை காலத்தில் கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களை புதுப் பொலிவுடன் ஏராளமான கூடுதல் அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய ஃபிகோ நிச்சயம் கவரும் எனலாம்.


Click it and Unblock the Notifications








