சந்தை போட்டி: ஃபியஸ்ட்டா விலையை அதிரடியாக குறைத்த ஃபோர்டு

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குளோபல் ஃபியஸ்ட்டா வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால், விலைதான் அந்த காரின் அருகில் வாடிக்கையாளர்கள் செல்ல அச்சம் தருவதாக இருந்தது.
நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குகிறோம் என்ற பெயரில் குளோபல் ஃபியஸ்ட்டாவின் விலையை மார்க்கெட்டு்க்கு தக்கவாறு இல்லாமல் அதிகமாக நிர்ணயித்துவிட்டது. இதனால், வடிவமைப்பு, வசதிகளில் நல்ல காராக இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர வில்லை.
இதை தற்போதுதான் ஃபோர்டு உணர்ந்து கொண்டுள்ளது. மேலும், ஃபியஸ்ட்டா உட்பட அனைத்து கார்களின் விலையையும் குறைக்க இருப்பதாக அண்மையில் கூறியிருந்தது. இதன்படியே, தற்போது குளோபல் ஃபியஸ்ட்டாவின் விலையை ரூ.1.45 லட்சம் வரை அதிரடியாக குறைத்துள்ளது ஃபோர்டு.
தற்போது ஃபியஸ்ட்டா ரூ.7.23 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேரியண்ட்டுகளுக்கு பதிலாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தலா இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே தற்போது ஃபியஸ்ட்டாவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஃபோர்டு.
பெட்ரோல் மாடலில் ஆம்பியன்ட் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் (மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்)ஆகிய வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். இதேபோன்று, டீசல் மாடலில் ஸ்டைல் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்களில் ஃபியஸ்ட்டா விற்பனைக்கு கிடைக்கும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பை அடுத்து மிட் சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, ஆல் நியூ வெர்னா, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுக்கு ஃபியஸ்ட்டா கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








