ஒரே நாளில் 45 புதிய கார் ஷோரூம்களை திறக்கிறது ஃபோர்டு

Ford Figo
வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக வரும் 16ந் தேதி நாடு முழுவதும் புதிதாக 45 கார் ஷோரூம்களை ஃபோர்டு நிறுவனம் திறக்க உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நிலையான இடத்தை பிடிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஃபிகோ, குளோபல் ஃபியஸ்ட்டா மாடல்கள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டபோதிலும், போதுமான ஷோரூம்களையும், சர்வீஸ் நெட்வொர்க் வசதி இல்லாதது ஃபோர்டு நிறுவனத்தின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவற்றை தவிர்த்து கார் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஃபோர்டு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், புதிய மாடல்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக அதிக டீலர் நெட்வொர்க் இருப்பதும் அவசியம்.

இவற்றை கருத்தில்க்கொண்டு, தனது டீலர் விரிவாக்கப் பணிகளையும் தீவிரப்படு்த்தியுள்ளது.வரும் 16ந் தேதி மட்டும் நாடு முழுவதும் புதிதாக 45 கார் ஷோரூம்களை திறக்க உள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

மாருதி உள்பட பல முன்னணி நிறுவனங்களின் சிறந்த சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டிருப்பதால்தான் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குகின்றன.

அதேபோன்று, சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் விதமாக புதிய ஷோரூம்களை திறக்க உள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. இதனிடையே, புதிய ஷோரூம்கள் திறக்கப்படும்போது புதிய கார் மாடலையும் அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக காற்று வழி செய்தி தெரிவிக்கிறது.

ஒரே நாளில் அதிக ஷோரூம்களை திறப்பது ஃபோர்டுக்கு புதிதல்ல. கடந்த 2010ம் ஆண்டு ஃபிகோ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஒரே நாளில் நாடு முழுவதும் 28 புதிய ஷோரூம்களை ஃபோர்டு திறந்தது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2012, 15:33 [IST]
English summary
Ford Motor is having some big plans for its Indian operations. The American carmaker that sells the Figo and Fiesta among other cars in India is planning to open 45 new showrooms across the country. To add to this all the new ford showrooms in India will be opened on the same day. February 16th has been set as the date for the showroom launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+