பெங்களூரில் அதிவிரைவு பழுது நீக்கும் மையத்தை திறந்த ஃபோர்டு

Ford Service Center
பெங்களூர், யஷ்வந்த்பூரில் அதிவிரைவு பழுது நீக்கும் மையத்தை ஃபோர்டு திறந்துள்ளது. முன்பதிவு இல்லாமல் வாடிக்கையாளர்கள் சிறிய பழுது நீக்கும் பணிகளை மட்டும் இந்த மையத்தில் விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.

வேலைப் பளுவால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கார் சர்வீஸ் செய்வதில் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். தற்போது கார் சர்வீஸ் செய்வதற்கு முறையான முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சென்று விட வேண்டியிருக்கிறது. ஆனால், பலருக்கு இதற்கு நேரம் கிடைப்பதில்லை.

இதுபோன்ற வாடிக்கையாளர்களின் நலன் கருதி தனது முதல் அதிவிரைவு சர்வீஸ் மையத்தை(குயிக் லேன் சர்வீஸ்) பெங்களூரில் திறந்திருக்கிறது ஃபோர்டு. இந்த சர்வீஸ் மையத்தில் முன்பதிவு எதுவும் பெறாமலேயே நேரடியாக சென்று கார்களை பழுது நீக்கிக் கொள்ளலாம்.

ஆயில் மாற்றுவது, பிரேக், சஸ்பென்ஷன் செக்கப், டயர் மாற்றுவது, வீல் அலைன்மென்ட் உள்ளிட்ட சிறிய அளவிலான பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மட்டும் இங்கே செய்யப்படும்.

10,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சர்வீஸ் ஸ்டேஷனில் நாள் ஒன்றுக்கு 35 கார்களை சர்வீஸ் செய்ய முடியும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் இங்கு பழுது நீக்கும் பணிகள் செய்யப்படும்.

இதுதவிர, இந்த மையத்தின் வாடிக்கையாளர் காத்திருப்பு கூடத்தில் வைஃபை வசதி இருப்பதால் இன்டர்நெட் தொடர்பு வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். பெரிய அளவிலான பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் இங்கு செய்யப்படாது என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 29, 2012, 14:43 [IST]
English summary
Ford is starting 'Quick Lane' service centre to offer quick service to its busy customers. The company has opened the first 'Quick Lane' service centre in Yeshwantpur, Bangalore.
மேலும்... #ford #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+