ஃபிகோவைவிட குறைந்த விலையில் புதிய கார்:ஃபோர்டு திட்டம்

ஃபிகோ கார் மூலம் இந்திய மார்க்கெட்டில் ருசிகண்ட பூனையாகிவிட்ட அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் முக்கிய இடத்தை பிடிக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்திய மார்க்கெட்டில் சிறிய கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், கூடுதலாக ஒரு சிறிய காரை நிலை நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வரும் 2015ம் ஆண்டில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் ஃபிகோவை விட குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த கார் இருக்கும் என்று ஃபோர்டு வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








