விற்பனை மந்தம்: ஃபியஸ்ட்டா விலையை குறைக்க ஃபோர்டு திட்டம்

வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விற்பனை இல்லாததால், ஆல் நியூ ஃபியஸ்ட்டா விலையை கணிசமாக குறைக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆல் நியூ ஃபியஸ்ட்டா காரை இந்திய மார்க்கெட்டில் ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வந்தது. ஃபுல் லோடட் எனப்படும் அனைத்து நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளுடன் ஆல் நியூ ஃபியஸ்ட்டாவை ஃபோர்டு களமிறக்கியது.

இந்த புதிய மாடல் தனது நிறுவனத்தின் விற்பனையில் புதிய கேம் சேஞ்சர் மாடலாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தது. ஆனால், ஃபோர்டு கனவு எல்லாம் பகல் கனவானது. ஆல் நியூ ஃபியஸ்ட்டாவின் விற்பனை வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

மிட் சைஸ் ரகத்தில் பிற கார் மாடல்களோடு ஒப்பிடும்போது, ஆல் நியூ ஃபியஸ்ட்டாவின் விலை ரொம்ப ஜாஸ்தியாக இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.

ஹூண்டாய் புளூயிடிக் வெர்னா, ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆகிய முன்னணி கார்களின் பெட்ரோல் மாடல் ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், ஃபோர்டு ஆல் நியூ ஃபியஸ்ட்டா ரூ.8.24 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஆல் நியூ ஃபியஸ்ட்டா பக்கம் வாடிக்கையாளர்கள் முகத்தைகூட திருப்பவில்லை. இதனால், ஃபியஸ்ட்டா விற்பனை படு மந்தமாக இருக்கிறது.

இந்த நிலையில், ஆல் நியூ ஃபியஸ்ட்டா விலையை கணிசமாக குறைக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலம், ஆல் நியூ ஃபியஸ்ட்டாவின் விற்பனை நன்கு வளர்ச்சி காணும் என்று ஃபோர்டு நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(ஆட்டோமொபைல்ஸ் பற்றிய அதிக தகவல்களுக்கு எங்களது ஃபேஸ்புக் பக்கத்திலும் பெறலாம்)

More from DriveSpark

Article Published On: Wednesday, February 29, 2012, 16:07 [IST]
English summary
American car maker Ford has decided to cut All new Fiesta price due to poor sales. The all new fiesta base variant priced Rs.8.24 lakhs. But the same range car models priced below Rs.7 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+