ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த ஃபோர்டு ஆயத்தம்?

இந்திய மார்க்கெட்டில் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்று வரும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், தனது கார் போர்ட்போலியோவை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு குளோபல் ஃபியஸ்ட்டாவை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் இந்த ஆண்டு புதிய ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அந்த நிறுவனம் விரைவில் மற்றொரு கார் மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது குளோபல் ஃபியஸ்ட்டா பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய ஃபியஸ்ட்டா பிரிமியம் ஹேட்ச்பேக் காரையும் அந்த நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் அட்டகாசமான வடிவமைப்புடன், ஏராளமான வசதிகளையும் கொண்டிருக்கும்.
ஹூண்டாய் ஐ-20 மற்றும் ஃபியட் கிராண்ட் புன்ட்டோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு இந்த கார் நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும். ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் கார் வடிவைமப்பில் ஒரு சில மாற்றங்களுடன் வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.
இந்த புதிய காரை ஃபிகோ மற்றும் ஃபியஸ்ட்டா செடான் காருக்கு இடைப்பட்ட செக்மென்ட்டில் நிலை நிறுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








