சென்னை ஃபோர்டு ஆலை 350 கோடியில் விரிவாக்கம்: கூடுதல் வேலைவாய்ப்பு

மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கு அதிக தேவை இருக்கிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும் டீசல் கார் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
அந்த வகையில், எதிர்கால தேவையை கருதி தனது டீசல் எஞ்சின் உற்பத்தி திறனை வெகுவாக உயர்த்திக் கொள்ளும் வகையில் சென்னை ஆலையில் விரிவாக்கப் பணிகளை செய்துள்ளது ஃபோர்டு.
சென்னை ஆலையில் ஆண்டுக்கு 2.60 லட்சம் எஞ்சின்களை தயாரிக்கும் திறனை ஃபோர்டு கொண்டிருந்தது. இதனை தற்போது ஆண்டுக்கு 3.40 லட்சம் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்துள்ளது ஃபோர்டு.
இதனால், ஆண்டுக்கு கூடுதலாக 80,000 எஞ்சின்களை உற்பத்தி செய்ய முடியும். இதற்காக 350 கோடி ரூபாயை ஃபோர்டு முதலீடு செய்திருக்கிறது. இந்த புதிய விரிவாக்கத்தின் மூலம் சென்னை ஃபோர்டு ஆலையில் புதிதாக 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








