தொழில்நுட்ப கோளாறு: 5.39 லட்சம் கார்களுக்கு ஃபோர்டு ரீகால்

Ford Escape
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 5.39 லட்சம் கார்களுக்கு உலக அளவில் திரும்ப பெறும் அறிவிப்பை ஃபோர்டு வெளியிட்டுள்ளது.

எஸ்கேப் எஸ்யூவி மற்றும் மெர்குரி மினி வேன்களில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து ஃபோர்டு நிறுவனத்துக்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து ஆய்வு செய்த ஃபோர்டு தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உறுதி செய்து தற்போது ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு செய்திதொடர்பாளர் டான் பியர்ஸ் கூறியதாவது:

"இரண்டு கார் மாடல்களுக்கு இந்த ரீகால் அறிவிப்பு பொருந்தும். பிரேக் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதால் 2.86 லட்சம் எஸ்கேப் எஸ்யூவிக்களை திரும்ப பெற இருக்கிறோம். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட எஸ்கேப் எஸ்யூவிக்களுக்கு இது பொருந்தும்.

இதேபோன்று, ப்ரீஸ்டார் மற்றும் மெர்குரி மினி வேன்களில் டார்க் கன்வெர்ட்டர் சரிவர இயங்காததால் அதை மாற்றி தருவதற்காக திரும்ப பெற உள்ளோம். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட மினி வேன்கள் திரும்ப பெறப்பட உள்ளது.

இதில், மெர்குரி பிராண்டு மினி வேன்களின் உற்பத்தி கடந்த 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. இந்த அறிவிப்பு மேற்கண்ட மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்," என்று தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 14, 2012, 11:39 [IST]
English summary
Ford recalled 5.39 vehicles all over the world. It was reported that 286,000 Ford Escape SUVs made for the 2001 and 2002 model years and nearly 253,000 Ford Freestar and Mercury Monterey minivans for 2004 and 2005 model years, will be recalled,says Ford spokesman Dan pierce.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+