ஃபிகோ, ஃபியஸ்ட்டா கிளாசிக் கார்களுக்கு ஃபோர்டு ரீகால்

ஃபிகோ மற்றும் ஃபியஸ்ட்டா கிளாசிக் கார்களின் சஸ்பென்ஷன் மற்றும் பவர் ஸ்டீயரிங்கில் பிரச்னை இருப்பதாக டீலர்கள் வாயிலாக ஃபோர்டு நிறுவனத்துக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து ஆய்வு செய்த அந்த நிறுவனம் இரு கார் மாடல்களிலும் சஸ்பென்ஷனின் ரியர் ட்விஸ்ட் பீம் மற்றும் பவர் ஸ்டீயரிங்கின் ஹோஸ் குழாயில் பிரச்னை இருப்பதை கண்டறிந்தது. இதையடுத்து, பிரச்னையை சரி செய்து தரும் விதமாக இரு கார் மாடல்களையும் திரும்ப பெற ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
கடந்த 2008 ஜனவரி முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் வரையில் தயாரிக்கப்பட்ட ஃபிகோ மற்றும் ஃபியஸ்ட்டா கார்களில் பவர் ஸ்டீயரிங்குக்கான ஹோஸ் குழாயை மாற்றித் தர ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
இதேபோன்று, 2010ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2011ம் ஆண்டு பிப்ரவரி இடையில் தயாரிக்கப்பட்ட ஃபிகோ மற்றும் ஃபியஸ்ட்டா கிளாசிக் கார்களில் சஸ்பென்ஷனுக்கான ரியர் ட்விஸ்ட் பீம் பாகத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட ஆண்டுக்களுக்கிடையில் தயாரிக்கப்பட்ட ஃபிகோ மற்றும் ஃபியஸ்ட்டா கிளாசிக் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அருகிலுள்ள ஃபோர்டு சர்வீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளுமாறு ஃபோர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் வாகனங்களில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனமே தாமாக முன்வந்து ரீகால் அறிவிப்பு வெளியிடும் நடைமுறையை சியாம் அறிவித்தது. இதனால், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தாமாகவே ரீகால் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் கடைசியாக ஃபோர்டு சேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








