குழப்பத்துக்கு தீர்வு: ஃபியஸ்ட்டா கிளாசிக் பெயரை மாற்றிய ஃபோர்டு

Fiesta Classic
ஃபியஸ்ட்டா கிளாசிக் கார் பெயரை வெறும் கிளாசிக் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆல்நியூ ஃபியஸ்ட்டா காரை ஃபோர்டு அறிமுகப்படுத்தியது. இது மிட்சைஸ் செக்மென்ட் கார்.

இதையடுத்து, குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த என்ட்ரி லெவல் ஃபியஸ்ட்டா காரின் பெயரை ஃபியஸ்ட்டா கிளாசிக் என மாற்றியது ஃபோர்டு.

ஆனால், மாறாக குழப்பம் தீரவில்லை. இரு கார்களின் பெயரும் குழப்பம் ஏற்படுத்தி வந்ததால், இந்த பிரச்னைக்கு தற்போது முடிவு கட்டியுள்ளது ஃபோர்டு.

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த ஃபியஸ்ட்டா கிளாசிக் காரின் பெயரை தற்போது வெறும் கிளாசிக் என மாற்றியுள்ளது. அத்தோடு நில்லாமல் புதிய கிளாசிக் காரில் சில கூடுதல் அம்சங்களையும் சேர்க்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது.

அலாய் வீல், ரூஃப் ஸ்பாய்லர், பின்புறம் பனிவிளக்குகள், ப்ளூடூத் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதலான அம்சங்களுடன் விரைவில் கிளாசிக் கார் வருகிறது.

டூவல் ஏர்பேக் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டிருக்கும். புதிய ஃபோர்டு கிளாசிக் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 12, 2012, 16:34 [IST]
English summary
Ford India has renamed its old Fiesta Classic sedan as Ford Classic. Though the carmaker had launched an all new Fiesta recently, Ford had retained the well selling Fiesta Classic sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+