ஃபோர்டு நியூ ஃபியஸ்ட்டாவின் பொலிவை கூட்டும் அக்சஸெரீஸ் கி்ட்

Ford Fiesta
ஆல் நியூ ஃபியஸ்ட்டாவுக்கு ஏராளமான கூடுதல் அக்சஸெரீஸ்களை ஃபோர்டு நிறுவனம் வழங்குகிறது. இந்த கூடுதல் பிராண்டட் அக்சஸெரீ மூலம் உங்களது ஃபியஸ்ட்டாவின் பொலிவை வெகுவாக கூட்டலாம்.

ஸ்டோரேஜ் வசதியுடன் ஆர்ம் ரெஸ்ட்:

நீண்ட தூர பயணங்களின்போது அதிக பொருட்களை எடுத்து செல்ல நேரிடும். இதற்காகவே, இடத்தை அடைத்துக்கொள்ளாதவாறு ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஆர்ம் ரெஸ்ட் ஃபோர்டு ஷோரூம்களில் கிடைக்கிறது.

கைகளுக்கு மிருதுவான கியர் ஷிப்டிங் லிவர்:

கியர் மாற்றும்போது சொகுசான அனுபவத்தை வழங்கும் புதிய கியர் ஷிப்டிங் லிவர் கிடைக்கிறது. இந்த கியர் லிவர் அலுமினியத்துடன் லெதர் மேலுறையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், கியர் ஷிப்டிங்கின்போது கைகளுக்கு மிக மிக மெருதுவாக இருக்கும்.

லெதர் ஸ்டீயரிங் வீல்:

அதிக கிரிப் தரும் வகையிலும், கைகளுக்கு மிருதுவான அனுபவத்தை கொடுக்கும் லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஃபியஸ்ட்டாவுக்கு கிடைக்கிறது.

ஃபியஸ்ட்டாவுக்கு சைடு கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள்:

ஃபியஸ்ட்டாவின் வெளிப்புற அழகை கூட்டும் வகையில், புதிய கிராபிக்ஸ் டிசைனுடன் கூடிய ஸ்டிக்கர்களை ஃபோர்டு விற்பனை செய்கிறது. இந்த ஸ்டிக்கர்கள் ஃபியஸ்ட்டாவுக்கு கூடுதல் கவர்ச்சியை வழங்கும்.

ஸ்லிம்லைன் வெதர் சீல்டு:

காரின் கண்ணாடிகளுக்கு மேலே பொருத்துவதற்கான வெதர் சீல்டு மிகவும் பயனுள்ள ஒரு அக்சஸெரீயாக கூறலாம். தூரல் மழை பெய்யும்போதும், காரின் கண்ணாடிகளை திறந்து வைத்துச் செல்லும்போதும் இந்த வெதர் சீல்டு பாதுகாப்பு தரும்.

மேலும், காற்றால் காரின் ஏரோடைனமிக்ஸ் பாதிக்காத வகையில், இந்த லெதர் சீல்டு பாதுகாக்கும் என்பதோடு, காரின் அழகையும் வெகுவாக கூட்டும்.

இதர அக்சஸெரீகள்:

பனி விளக்கு, முன்பக்கம் மற்றும் பின்பக்கத்திற்கான எக்ஸ்ட்ரா பம்பர், ஸ்போர்ட்டி பெடல்கள், கார்ப்பெட் ப்ளோர் மேட்டுகள், நோக்கியா புளூடூத் ஹேண்ட்ஸ்ப்ரீ கிட், ஹப்பர்டிக் சன் பிலிம் கன்ட்ரோல் பேப்பர்கள், கார்வேர் சன்பிலிம், வாக்ஸ்யாயில் கார் ட்ரீட்மென்ட், ஃபோர்டு பில்லோஸ், நெக் ரெஸ்ட், சீட் பெல்ட் பேட், கார் கவர், கார் ப்ரீட்ஜ் ஆகியவை கூடுதல் அக்சஸெரீஸாக கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 17, 2012, 12:57 [IST]
English summary
Ford India is offering a wide range of accessories for its global sedan Fiesta. You can personalize your Fiesta and add to its look and feel by buying these official accessories from Ford. These accessories will also improve the experience of driving and riding the Fiesta. Read on to see the long list of accessories for the Ford Fiesta
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+