வரும் ஞாயிறன்று நள்ளிரவு வரை ஷோரூம் திறந்திருக்கும்: ஃபோர்டு

பட்ஜெட்டுக்கு பின் கார் விற்பனை மந்தமடைந்துள்ளது. விலை உயர்வுதான் முக்கிய பிரச்னையாகியுள்ளது. எனவே, கார் விற்பனையை அதிகரிக்க சலுகைகள் மற்றும் வித்தியாசமான யுத்திகளை கார் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.
அந்த வகையில், ஃபோர்டு நிறுவனம் நடுராத்திரி கார் விற்பனையை நடத்தவுள்ளது. கடந்த டிசம்பர் ஃபோர்டின் நடுராத்திரி கார் விற்பனை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2 நாட்களில் 15 நாட்களுக்கான இருப்பு வைக்கப்பட்டிருந்த கார்கள் விற்று தீர்ந்தன.
எனவே, மீண்டும் தற்போது நடுராத்திரி விற்பனை ஆயுதத்தை கையில் எடுக்கவுள்ளது ஃபோர்டு. வரும் ஞாயிறன்று நடைபெறும் நடுராத்திரி கார் விற்பனை மேளாவில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எல்இடி டிவி, டிவிடி, சிறப்பு வட்டி விகிதங்களில் கார் கடன் உள்ளிட்ட சலுகைகளை பெறலாம். தவிர நிச்சய பரிசுகளும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








