திருச்சியில் அவசர சாலை உதவி சேவையை துவங்கிய ஃபோர்டு

ஃபோர்டு கார் நிறுவனமும் விற்பனைக்கு பின் வாடிக்கையாளர் சேவை வழங்குவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சாலையில் கார் பழுது ஏற்பட்டு நடுவழியில் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் அவசர உதவி வழங்கும் சேவையை வழங்கி வருகிறது.
தற்போது சென்னை உள்பட நாட்டின் 47 நகரங்களி்ல் இந்த சேவையை ஃபோர்டு வழங்கி வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர் நலனை கருத்தில்கொண்டு தற்போது புதிதாக 5 நகரங்களில் இந்த சேவையை விரிவுப்படுத்தி இருக்கிறது ஃபோர்டு.
ஜோத்பூர், உதய்பூர், ராஞ்சி, விசாகப்பட்டினம் மற்றும் திருச்சி ஆகிய 5 நகரங்களில் இந்த சேவையை ஃபோர்டு துவங்கியிருக்கிறது. இதன்மூலம், தனது 80 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற முடியும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் புதிய நகரங்களில் சாலை அவசர உதவி சேவையை விரிவுப்படுத்த இருப்பதாகவும், இதன்மூலம் 85 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற முடியும் என்றும் ஃபோர்டு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








