5 பேர் செல்லும் மினி எம்பிவியை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு

Ford B-max
வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் தனது புதிய மினி எம்பிவியை ஃபோர்டு பார்வைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

பி-மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மினி எம்பிவி 5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும். புதிய குளோபல் ஃபியஸ்ட்டா பிளாட்பார்மில்தான் இந்த புதிய மினி எம்பிவியும் வடிவைக்கப்பட்டுள்ளது.

மிக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய எம்பிவி பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்கிறது. மேலும், பி-மேக்ஸ் எம்பிவி பல புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும். தவிர, பக்கவாட்டு கதவுகளுக்கு இடையில், சென்டர் பில்லர் இல்லாமல் இருக்கும் வகையில், இதன் கான்செப்ட் மாடல் உள்ளது.

அதிக இடவசதி, தரம் என அனைத்து அம்சங்களிலும் குறைவில்லாத ஓர் காராக இது மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. ஃபோர்டு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 8 புதிய மாடல்களில் பி-மேக்ஸ் மினி எம்பிவியும் ஒன்றாக இருக்கும்.

4.04 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மினி எம்பிவி, 1.0 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் எஞ்சினை கொண்டிருக்கும். தவிர, 1.5 லிட்டர் டியுராடார்க் டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கும்.

தற்போது 4.04 மீட்டர் நீளம் கொண்டிருந்தாலும், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மாடலை வரிச்சலுக்கை பெறும் 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைப்பில் சிறு மாறுதல் பெறும் என்றும் கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 4, 2012, 16:07 [IST]
English summary
Ford motors to unveil the much awaited B-max mini MPV in upcoming Geneva motor show. The 5 seater mini MPV expected to arrive in India few changes. The B-max will come up with 1.0 liter Ecoboost petrol engine and 1.5 Duratorq diesel engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+