இந்திய கார் மார்க்கெட் மந்தம்: ஃபோர்டு தலைவர் கவலை!

ஆலன் முலலி
"இந்திய கார் மார்க்கெட்டில் நிலவும் மந்தமான போக்கு மிகுந்த கவலை அளிக்கிறது," என்று ஃபோர்டு நிறுவனத் தலைவர் ஆலன் முலலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் நடந்த அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் ஃபோர்டு நிறுவனத் தலைவர் ஆலன் முலலி கவுரவிக்கப்பட்டார்.அப்போது பேசிய அவர் கூறியதாவது,

உலக அளவில் இந்தியாவை எங்களுக்கு மிக முக்கியமான மார்க்கெட்டாக கருதுகிறோம். ஆனால், இந்தியாவில் தற்போது கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தமான போக்கு கவலை அளிக்கிறது.

இருப்பினும், அடுத்த 5 ஆண்டுகளில் 8 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளோம். இந்தியாவில் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை ஆலைக்காக இதுவரை ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளோம்.

இதேபோன்று, குஜராத்தில் கட்டப்பட உள்ள புதிய ஆலைக்காக புதிதாக ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளோம். இதன்மூலம், 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 19, 2012, 11:14 [IST]
English summary

 Ford, the American carmaker which has expressed India as one of its most important growth markets is now concerned about the slow down in the Indian market. Ford's president and chief executive officer Allan Mulally in an interview has stated that the company was seriously concerned with the slowdown in the Indian market.
மேலும்... #ford #auto news #போர்டு
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+