மிட்சுபிஷி கார்களுக்கு இலவச சர்வீஸ் மேளா நடத்தும் எச்எம்

Pajero
மிட்சுபிஷி கார்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு கோடைகால இலவச சர்வீஸ் முகாமை நடத்துகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.

ஜப்பானிய நிறுவனமான மிட்சுபிஷி ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் கார் விற்பனை செய்து வருகிறது. போதுமான ஷோரூம் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் இல்லாமல் விற்பனையில் சரியான இடத்தை பிடிக்க முடியாமல் மிட்சுபிஷி-ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூட்டணி தவித்து வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில்க்கொண்டு மிட்சுபிஷி கார்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு இலவச சர்வீஸ் முகாமை நடத்துவதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

பஜேரோ, மான்ட்டெரோ, அவுட்லேண்டர், சிடியா மற்றும் லான்சர் கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இலவச சர்வீஸ் முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சர்வீஸ் முகாமில் ஏசி, ஆயில், பேட்டரி உள்பட முக்கிய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலவச வாட்டர் சர்வீஸ், தள்ளுபடி விலையில் ஸ்பேர்ட் பார்ட்ஸ் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மிட்சுபிஷி கார் ஷோரூம்களிலும் இந்த இலவச சர்வீஸ் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 16, 2012, 10:44 [IST]
English summary
Hindustan motors to conduct a 3-day free summer service check-up camp for its Mitsubishi range of vehicles from May 17 to 19 at its dealerships all over the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+