ரூ.2500 விலையில் புதிய நேவிகேஷன் அப்ளிகேஷன்: ஜிஎம் வெளியிடுகிறது

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு பிராண்டுகளில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், அந்த நிறுவனத்தின் செவர்லே பிராண்டு உலக அளவில் கார் விற்பனையில் ஜெனரல் மோட்டார்சுக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் வரும் சிறிய கார்களுக்கு மலிவு விலையில் புதிய நேவிகேஷன் அப்ளிகேஷனை ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்துள்ளது. அமெரிக்காவில் வெறும் 50 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,500) விலையில் இந்த புதிய அப்ளிகேஷனை விற்பனை செய்ய உள்ளது.
அமெரிக்காவில் செவர்லே பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்பார்க்(இந்தியாவில் பீட்) மற்றும் சோனிக் கார்களுக்காக இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் டிஸ்ப்ளே மூலம் தகவல்களை தெரிவிக்கும்.
இந்த புதிய நேவிகேஷன் அப்ளிகேஷன் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களை சப்போர்ட் செய்யும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அமெரி்க்காவை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்யப்படும் நாடுகளிலும் இந்த புதிய அப்ளிகேஷனை ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








