கார் விலையை ரூ.20,000 வரை உயர்த்திய ஜெனரல் மோட்டார்ஸ்

உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவீனம் உயர்வு, ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கங்களை காரணம் காட்டி முன்னணி கார் நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில், செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. அனைத்து கார் விலையையும் ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தியிருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்.
வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து கார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








